1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
விளக்கம் : ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்
Couplet :
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within
Explanation : The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man
Transliteration : Vanja Manaththaan Patitrozhukkam PoodhangalAindhum Akaththe Nakum
2. வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்
விளக்கம் : தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை
Couplet :
What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault
Explanation : What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin
Transliteration : Vaanuyar Thotram Evanseyyum ThannenjamThaanari Kutrap Patin
3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
விளக்கம் : மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்
Couplet :
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within
Explanation : The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin
Transliteration : Valiyil Nilaimaiyaan Valluruvam PetramPuliyindhol Porththumeyn Thatru
4. தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
விளக்கம் : புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை
Couplet :
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks
When, clad in stern ascetic garb, one secret evil works
Explanation : He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds
Transliteration : Thavamaraindhu Allavai Seydhal PudhalmaraindhuVettuvan Pulsimizhth Thatru
5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்
விளக்கம் : எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்
Couplet :
'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry
Explanation : The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, 'Oh! what have we done, what have we done.'
Transliteration : Patratrem Enpaar Patitrozhukkam EtretrendruEdham Palavun Tharum
6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்
விளக்கம் : உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை
Couplet :
In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'
Explanation : Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)
Transliteration : Nenjin Thuravaar Thurandhaarpol VanjiththuVaazhvaarin Vankanaar ill
7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து
விளக்கம் : வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு
Couplet :
Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night
Explanation : (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry
Transliteration : Purangundri Kantanaiya Renum AkangundriMukkir Kariyaar Utaiththu
8. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
விளக்கம் : நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
Couplet :
Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame
Explanation : 35 There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of
Transliteration : Manaththadhu Maasaaka Maantaar NeeraatiMaraindhozhuku Maandhar Palar
9. கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்
விளக்கம் : நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்
Couplet :
Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet
Explanation : As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated
Transliteration : Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang KannaVinaipatu Paalaal Kolal
10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
விளக்கம் : உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்
Couplet :
What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong
Explanation : There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned
Transliteration : Mazhiththalum Neettalum Ventaa UlakamPazhiththadhu Ozhiththu Vitin
No comments:
Post a Comment