1. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
விளக்கம் : எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்
Couplet :
Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried
Explanation : Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
Transliteration : Enaivakaiyaan Theriyak Kannum VinaivakaiyaanVeraakum Maandhar Palar
2. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
விளக்கம் : ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது
Couplet :
No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care
Explanation : (A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment
Transliteration : Arindhaatrich Cheykirpaarku Allaal VinaidhaanSirandhaanendru Evarpaar Randru
3. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்
விளக்கம் : செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்
Couplet :
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed
Explanation : Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it
Transliteration : Seyvaanai Naati Vinainaatik KaalaththotuEydha Unarndhu Seyal
4. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
விளக்கம் : ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்
Couplet :
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand
Explanation : After having considered, 'this man can accomplish this, by these means', let (the king) leave with him the discharge of that duty
Transliteration : Ithanai Ithanaal Ivanmutikkum EndraaindhuAdhanai Avankan Vital
5. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
விளக்கம் : ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்
Couplet :
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own
Explanation : Having considered what work a man is fit for, let (the king) employ him in that work
Transliteration : Vinaik Kurimai Naatiya Pindrai AvanaiAdharkuriya Naakach Cheyal
6. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
விளக்கம் : எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்
Couplet :
Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share
Explanation : Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties
Transliteration : Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive RaakaNinaippaanai Neengum Thiru
7. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
விளக்கம் : உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்
Couplet :
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way
Explanation : Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly
Transliteration : Naatorum Naatuka Mannan VinaiseyvaanKotaamai Kotaa Thulaku
8. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
விளக்கம் : நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்
Couplet :
Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ
Explanation : He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking
Transliteration : Nanmaiyum Theemaiyum Naati NalampurindhaThanmaiyaan Aalap Patum
9. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை
விளக்கம் : வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்
Couplet :
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand
Explanation : Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)
Transliteration : Vaari Perukki Valampatuththu UtravaiAaraaivaan Seyka Vinai
10. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
விளக்கம் : அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்
Couplet :
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be
Explanation : Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness
Transliteration : Anparivu Thetram Avaavinmai InnaankumNankutaiyaan Katte Thelivu
No comments:
Post a Comment