1. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்
Couplet :
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay
Explanation : If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him
Transliteration : Thannaiththaan Kaakkin Sinangaakka KaavaakkaalThannaiye Kollunj Chinam
2. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
விளக்கம் : சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்
Couplet :
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear
Explanation : The fire of anger will burn up even the pleasant raft of friendship
Transliteration : Sinamennum Serndhaaraik Kolli InamennumEmap Punaiyaich Chutum
3. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
விளக்கம் : நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்
Couplet :
The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing
Explanation : Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail
Transliteration : Sinaththaip Porulendru Kontavan KetuNilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
4. இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
விளக்கம் : தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது
Couplet :
Though men should work thee woe, like touch of tongues of fire
'Tis well if thou canst save thy soul from burning ire
Explanation : Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger
Transliteration : Inareri Thoivanna Innaa SeyinumPunarin Vekulaamai Nandru
5. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்
விளக்கம் : உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்
Couplet :
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires
Explanation : If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of
Transliteration : Ulliya Thellaam Utaneydhum UllaththaalUllaan Vekuli Enin
6. இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
விளக்கம் : எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்
Couplet :
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they
Explanation : Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)
Transliteration : Irandhaar Irandhaar Anaiyar SinaththaithThurandhaar Thurandhaar Thunai
7. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
விளக்கம் : தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
Couplet :
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein
Explanation : He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
Transliteration : Sellitaththuk Kaappaan Sinangaappaan AllitaththukKaakkinen Kaavaakkaal En?
8. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற
விளக்கம் : வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை
Couplet :
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still
Explanation : Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil
Transliteration : Sellaa Itaththuch Chinandheedhu SellitaththumIladhanin Theeya Pira
9. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
விளக்கம் : யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
Couplet :
If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget
Explanation : Forget anger towards every one, as fountains of evil spring from it
Transliteration : Maraththal Vekuliyai Yaarmaattum TheeyaPiraththal Adhanaan Varum
10. நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
விளக்கம் : சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
Couplet :
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy
Explanation : What other foe to man works such annoy?
Transliteration : Nakaiyum Uvakaiyum Kollum SinaththinPakaiyum Ulavo Pira
No comments:
Post a Comment