துணைவலியுந் தூக்கிச் செயல்
விளக்கம் : செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்
Couplet :
The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes
Explanation : Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act
Transliteration : Vinaivaliyum Thanvaliyum Maatraan ValiyumThunaivaliyum Thookkich Cheyal
2. ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
விளக்கம் : ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை
Couplet :
Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss
Explanation : There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and
Transliteration : Olva Tharivadhu Arindhadhan KandhangichChelvaarkkuch Chellaadhadhu ill
3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
விளக்கம் : தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு
Couplet :
Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven
Explanation : There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it
Transliteration : Utaiththam Valiyariyaar Ookkaththin OokkiItaikkan Murindhaar Palar
4. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
விளக்கம் : மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்
Couplet :
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes
Explanation : He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does
Transliteration : Amaindhaang Kozhukaan Alavariyaan ThannaiViyandhaan Viraindhu Ketum
5. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
விளக்கம் : மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்
Couplet :
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain
Explanation : The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded
Transliteration : Peelipey Saakaatum Achchirum AppantanjjchAala Mikuththup Peyin
6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
விளக்கம் : தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்
Couplet :
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays
Explanation : There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further
Transliteration : Nunikkompar Erinaar Aqdhiran ThookkinUyirkkirudhi Aaki Vitum
7. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
விளக்கம் : வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்
Couplet :
With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live
Explanation : Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property
Transliteration : Aatrin Aravarindhu Eeka AdhuporulPotri Vazhangu Neri
8. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
விளக்கம் : எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை
Couplet :
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare
Explanation : Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income
Transliteration : Aakaaru Alavitti Thaayinung KetillaiPokaaru Akalaak Katai
9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
விளக்கம் : இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்
Couplet :
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found
Explanation : The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue
Transliteration : Alavarindhu Vaazhaadhaan Vaazhkkai UlapolaIllaakith Thondraak Ketum
10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
விளக்கம் : தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்
Couplet :
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans
Explanation : The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property
Transliteration : Ulavarai Thookkaadha Oppura VaanmaiValavarai Vallaik Ketum
வளவரை வல்லைக் கெடும்
விளக்கம் : தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்
Couplet :
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans
Explanation : The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property
Transliteration : Ulavarai Thookkaadha Oppura VaanmaiValavarai Vallaik Ketum
No comments:
Post a Comment