1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
விளக்கம் : செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
Couplet :
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent
Explanation : Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth
Transliteration : Selvaththut Selvanj Chevichchelvam AchchelvamSelvaththu Lellaan Thalai
2. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
விளக்கம் : செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்
Couplet :
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need
Explanation : When there is no food for the ear, give a little also to the stomach
Transliteration : Sevikkuna Villaadha Pozhdhu SiridhuVayitrukkum Eeyap Patum
3. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
விளக்கம் : குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்
Couplet :
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share
Explanation : Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices
Transliteration : Seviyunavir Kelvi Yutaiyaar AviyunavinAandraaro Toppar Nilaththu
4. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை
விளக்கம் : நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்
Couplet :
Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay
Explanation : Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity
Transliteration : Katrila Naayinung Ketka AqdhoruvarkuOrkaththin Ootraan Thunai
5. இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
விளக்கம் : வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்
Couplet :
Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways
Explanation : The words of the good are like a staff in a slippery place
Transliteration : Izhukkal Utaiyuzhi Ootrukkol AtreOzhukka Mutaiyaarvaaich Chol
6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
விளக்கம் : நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
Couplet :
Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity
Explanation : Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity
Transliteration : Enaiththaanum Nallavai Ketka AnaiththaanumAandra Perumai Tharum
7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
விளக்கம் : எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்
Couplet :
Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard
Explanation : Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)
Transliteration : Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa RizhaiththunarnTheentiya Kelvi Yavar
8. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
விளக்கம் : இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
Couplet :
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear
Explanation : The ear which has not been bored by instruction, although it hears, is deaf
Transliteration : Ketpinung Kelaath Thakaiyave KelviyaalThotkap Pataadha Sevi
9. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
விளக்கம் : தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
Couplet :
'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard
Explanation : It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction
Transliteration : Nunangiya Kelviya Rallaar VanangiyaVaayina Raadhal Aridhu
10. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்
விளக்கம் : செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்
Couplet :
His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live
Explanation : What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?
Transliteration : Seviyir Suvaiyunaraa Vaayunarvin MaakkalAviyinum Vaazhinum En?
No comments:
Post a Comment