1. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
விளக்கம் : பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்
Couplet :
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light
Explanation : By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished
Transliteration : Kutiyennum Kundraa Vilakkam MatiyennumMaasoora Maaindhu Ketum
2. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
விளக்கம் : குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
Couplet :
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity
Explanation : Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct
Transliteration : Matiyai Matiyaa Ozhukal KutiyaikKutiyaaka Ventu Pavar
3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து
விளக்கம் : அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்
Couplet :
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself
Explanation : The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead
Transliteration : Matimatik Kontozhukum Pedhai PirandhaKutimatiyum Thanninum Mundhu
4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
விளக்கம் : சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்
Couplet :
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive
Explanation : Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions
Transliteration : Kutimatindhu Kutram Perukum MatimatindhuMaanta Ugnatri Lavarkku
5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
விளக்கம் : காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!
Couplet :
Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore
Explanation : Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction
Transliteration : Netuneer Maravi Matidhuyil NaankumKetuneeraar Kaamak Kalan
6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
விளக்கம் : தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்
Couplet :
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain
Explanation : It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it
Transliteration : Patiyutaiyaar Patramaindhak Kannum MatiyutaiyaarMaanpayan Eydhal Aridhu
7. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
விளக்கம் : முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்
Couplet :
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt
Explanation : Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject
Transliteration : Itipurindhu Ellunj Chol Ketpar MatipurindhuMaanta Ugnatri Lavar
8. மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
விளக்கம் : பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்
Couplet :
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be
Explanation : If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies
Transliteration : Matimai Kutimaikkan Thangindhan OnnaarkkuAtimai Pukuththi Vitum
9. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
விளக்கம் : தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்
Couplet :
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves
Explanation : When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear
Transliteration : Kutiyaanmai Yulvandha Kutram OruvanMatiyaanmai Maatrak Ketum
10. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
விளக்கம் : சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்
Couplet :
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid
Explanation : The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot
Transliteration : Matiyilaa Mannavan Eydhum AtiyalandhaanThaaaya Thellaam Orungu
No comments:
Post a Comment