1. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
விளக்கம் : ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்
Couplet :
An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings
Explanation : He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings
Transliteration : Pataikuti Koozhamaichchu Natparan AarumUtaiyaan Arasarul Eru
2. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
விளக்கம் : துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்
Couplet :
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore
Explanation : Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character
Transliteration : Anjaamai Eekai Arivookkam InnaankumEnjaamai Vendhark Kiyalpu
3. தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
விளக்கம் : காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
Couplet :
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong
Explanation : These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country
Transliteration : Thoongaamai Kalvi Thunivutaimai ImmoondrumNeengaa Nilanaan Pavarkku
4. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
விளக்கம் : அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்
Couplet :
Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains
Explanation : He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice
Transliteration : Aranizhukkaa Thallavai Neekki MaranizhukkaaMaanam Utaiya Tharasu
5. இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
விளக்கம் : முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்
Couplet :
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends
Explanation : He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it
Transliteration : Iyatralum Eettalung Kaaththalum KaaththaVakuththalum Valla Tharasu
6. காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
விளக்கம் : காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்
Couplet :
Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells
Explanation : The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language
Transliteration : Kaatchik Keliyan Katunjollan AllanelMeekkoorum Mannan Nilam
7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
விளக்கம் : வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்
Couplet :
With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command
Explanation : The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him
Transliteration : Insolaal Eeththalikka Vallaarkkuth ThansolaalThaankan Tanaiththiv Vulaku
8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
விளக்கம் : நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்
Couplet :
Who guards the realm and justice strict maintains,
That king as god o'er subject people reigns
Explanation : That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).
Transliteration : Muraiseydhu Kaappaatrum Mannavan MakkatkuIraiyendru Vaikkap Patum
9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
விளக்கம் : காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்
Couplet :
The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure
Explanation : The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear
Transliteration : Sevikaippach Chorporukkum Panputai VendhanKavikaikkeezhth Thangum Ulaku
10. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
விளக்கம் : நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்
Couplet :
Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal
Explanation : He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people
Transliteration : Kotaiyali Sengol Kutiyompal NaankumUtaiyaanaam Vendhark Koli
No comments:
Post a Comment